திருச்சி: வையம்பட்டி அருகே பெண் தற்கொலை

0பார்த்தது
திருச்சி: வையம்பட்டி அருகே பெண் தற்கொலை
மணப்பாறையை அடுத்த கருங்குளம் மேற்குத் தெருவைச் சேர்ந்த அருள்ஜெனிபர் (25) என்பவர், பொங்கல் பரிசுத் தொகை தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கரூர் மாவட்டம், பொய்யாமணியைச் சேர்ந்த சந்திரமௌலியை காதல் திருமணம் செய்து, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக கருங்குளத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி