திருச்சி: குடிநீா் வடிகால் வாரியத்தில் திருடிய இளைஞா் கைது

7பார்த்தது
திருச்சி: குடிநீா் வடிகால் வாரியத்தில் திருடிய இளைஞா் கைது
திருச்சி காஜாமலை ஜெ. கே. நகரில் உள்ள ஆய்வக வளாகத்தில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவிப் பொறியாளர் ஜெ. சிரில் பில்கிரின் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். செவ்வாய்க்கிழமை, விமான நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த ஆர். கார்த்திகுமார் (24) என்பவர் கட்டுமானப் பொருள்களைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார்.