மணப்பாறை அருகே சீகம்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சின்னமனப்பட்டி பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், கருணாநிதியின் நண்பர்களான செல்வராஜ் மற்றும் பூபதி ஆகியோர் முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்து பாலத்திற்கு அடியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.