திருச்சி பெட்டவாய்த்தலை காவல் நிலையம் உட்பட்ட பெருகமணி மேலத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வயலுக்கு செல்வதாக கூறிச் சென்றார். மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது உய்யகொண்டான் ஆற்றங்கரை பகுதியில் பால்ராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் இருந்தது.
இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான வயல்வெளி பகுதியில் தேடிப் பார்த்தபோது நானாற்று புட்கள் எரிந்து கிடந்தன. அதில் பால்ராஜ் உடலில் தீக்காயமுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து பால்ராஜ் மகன் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் அங்கு வந்த பெட்டவாய்த்தலை போலீசார் பால்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து நானாற்று புட்களில் வைத்த தீயில் சிக்கி பால்ராஜ் இறந்தாரா அல்லது சதி வேலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.