முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து குறைந்தது

1பார்த்தது
காவிரி கரையோரப் பகுதிகளில் மழை குறைந்ததால், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்றைய தினம் 16,571 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 14,050 கன அடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 13,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து குறைந்த நிலையிலும், முக்கொம்பு தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி