திருச்சி ஸ்ரீரங்கம் மூலதொப்பு மலையப்பன் நகரைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் கடந்த இரண்டாம் தேதி கொள்ளிடம் ஆறு அருகே நடந்து சென்றபோது, மர்மநபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலை ஜே.ஜே. நகரைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.