மணப்பாறை கட்சிக்காரன் பட்டியை சேர்ந்தவர் ஜோதிமணி இவர் தனது நண்பர்கள் ஆன ரமேஷ் சுப்பிரமணி ஆகியோருடன் மணப்பாறை கண்ணுடன்பட்டியில் உள்ள ஆத்துவாரியில் (தண்ணீர் தேக்கி வைப்பதற்கான தடுப்பணை) தேங்கி கிடக்கும் தண்ணீரில் குளிப்பதற்காக வந்துள்ளனர். மூவரும் சேர்ந்து குளித்து கொண்டிருந்த நிலையில் ஜோதிமணி என்பவர் மட்டும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். மேற்படி சம்பவம் குறித்து மணப்பாறை காவல் நிலையம் மற்றும் மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. மணப்பாறை தீயணைப்புதுறையினர் ஆற்றில் மூழ்கி இறந்த ஜோதிமணி என்பவரின் உடலை மீட்டனர். மணப்பாறை காவல் ஆய்வாளர் சீனிபாபு இறந்த நபரின் பிரேதத்தை பிரேத விசாரணைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேற்படி சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.