திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன், செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ரஃபீக். இருவரும் சோமரசம்பேட்டை அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அல்லித்துறை புங்கனூர் சாலையில் வந்தபோது, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த 2 பேர் மணிகண்டன், முகமது ரபிக் வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதினர். இதில் நான்கு பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக இறந்தார். மூன்று பேர் காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் பெயர் மற்றும் முகவரி உடனே தெரியவில்லை. மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.