
தா. பேட்டையில் சமுதாய வளைகாப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா. பேட்டையில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டார். அவர் கர்ப்பிணி பெண்களுக்கு பூ, பழம், குங்குமம் மற்றும் கர்ப்பகாலப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். இந்த நிகழ்வு சமூக நலத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.




































