லால்குடி அடுத்த பூவாளூர் பகுதியில் நேற்று (மே 23) மாலை, முப்பது பயணிகளுடன் அரியலூர் நோக்கிச் சென்ற சுற்றுலா வேன், ஓட்டுநரின் கவனக்குறைவால் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, வேன் உயர் மின்மாற்றியில் மோதாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வேனில் பயணித்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.