திருச்சி திருவரம்பூர் அருகே உள்ள மலைக்கோவில் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோன்ராஜ் இவரது மகன் விவேக் இவர் நேற்று கூத்தைப்பார் செவந்தான் குளம் கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அவ்வழியாக வந்த மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த ரவுடியான கார்த்திக் அவரது நண்பர்கள் ஆன காந்தி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார், காட்டூர் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, அண்ணாநகர் ராஜவீதியைச் சேர்ந்த சந்தோஷ்சாலமன்ராஜ் ஆகிய நான்கு பேரும் விவேக்கிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரூபாய் 2000 பறித்துள்ளனர்.
இது குறித்து விவேக் திருவரம்பூர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.