ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வசதி பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.