திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக உலக எயிட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரும் பொறுப்பு முதல்வருமான முனைவர் கா வாசுதேவன் அவர்கள் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முகப்பில் ஆரம்பித்து மன்னார்புரம் சிக்னல் வரை நடைபெற்ற இந்தப் பேரணியில், மாணவ மாணவியர் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர் மற்றும் விழிப்புணர்வு கருத்துக்களைக் கூறினர்.