திருச்சி கண்டொண்மென்ட் ஒத்தக்கடை புதூர் தெருவைச் சேர்ந்த லியோ சார்லஸ் என்பவர் அக்டோபர் 29ஆம் தேதி டூவீலரில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது செல்போன் திருடு போனது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவனிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டான்.