திருச்சியில் மனைவி பிரிந்து சென்றதால் கார் டிரைவர் தற்கொலை

0பார்த்தது
திருச்சியில் மனைவி பிரிந்து சென்றதால் கார் டிரைவர் தற்கொலை
திருச்சி மேல அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் நந்தா, எட்டு மாதங்களுக்கு முன்பு ரம்யா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக ரம்யா தாய் வீட்டில் வசித்து வந்தார். மனைவியை அழைத்து வர மாமனார் வீட்டிற்குச் சென்ற நந்தாவிடம், ரம்யா வர மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நந்தா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி