மணப்பாறை அருகே வீரமலை பாளையத்தில் துப்பாக்கிச் சூடு பயிற்சி முகாம் வரும் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், அப்பகுதிகளில் மனித நடமாட்டமும், ஆடு, மாடு மேய்ச்சலும் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.