நாமக்கல் மாவட்டம் செல்லிபாளையத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் டாட்டா ஏஸ் வாகனத்தில் லோடு ஏற்றிச் சென்றபோது, துறையூர் தம்மம்பட்டி சாலையில் நாகநல்லூர் அருகே விபத்துக்குள்ளானார். எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.