முசிறி அருகே 2 பைக்குகள் மோதி முதியவர் சாவு

39பார்த்தது
முசிறி அருகே தும்பலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, நடராஜ் (75) என்ற முதியவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக் மோதி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முசிறி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.