திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சாலையை கடக்க முயன்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கௌமாரி என்ற வயதான பெண், புத்தாநத்தம் நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.