மணப்பாறை அரசு கல்லூரியில் போட்டி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

528பார்த்தது
மணப்பாறை அரசு கல்லூரியில் போட்டி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய இலவச போட்டித் தேர்வு வகுப்பின் தொடக்க விழாவில், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அருணகிரி சிறப்புரையாற்றினார். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் குறிப்பெடுத்துப் படிக்கும் முறைகள் குறித்து அவர் விளக்கினார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி