தாவேக் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த குப. கிருஷ்ணன் மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கும் இந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த அரசியல் நகர்வுகள் திருச்சி கிழக்கு தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.