ஜீயபுரம்: அடுத்தடுத்த மூன்று வீடுகளில் 7 பவுன் நகை திருட்டு

73பார்த்தது
ஜீயபுரம்: அடுத்தடுத்த மூன்று வீடுகளில் 7 பவுன் நகை திருட்டு
திருச்சி ஜீயபுரம் அடுத்த அள்ளூர் ஜனதா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ரயில்வே பணியாளர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஏசி வேலை செய்யாததால் மாடியில் உள்ள அறையில் குடும்பத்தினருடன் தூங்கினார். அதிகாலையில் மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து ஏழு பவுன் தங்கநகைகளை திருடிச் சென்றனர். 

காலையில் எழுந்து பார்த்தபோழுது வீடு திறந்து கிடந்ததை கண்டு பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஏழு பவுன் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அடுத்தடுத்து சுரேஷ் மற்றும் பரிமளம் ஆகியோரது வீடுகளிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீடுகளில் தடயங்களைச் சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி