திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையாகுளம் புதூர் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் பழனியாண்டி, நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மேக்கல்நாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.