திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

322பார்த்தது
திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
திருச்சி, கருமண்டபத்தில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 77-ம் ஆண்டு வைகாசி திருவிழா மற்றும் 35-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குத்துவிளக்கு பூஜை நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். தொடக்க நாளில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கோரையாற்றில் இருந்து அம்மனுக்கு பூ கொண்டு வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி