மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வருபவர் முகமது ஜமீல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் மோசடி செய்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள குர்கான் போலீசார் முஹம்மது ஜமீல் மீது வழக்குப் பதிந்து லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி திருச்சியில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அப்போது குடியுரிமை பிரிவு அதிகாரிகள் பிடியில் சிக்கினார். உடனே இங்குள்ள போலீசார் ஹரியானா மாநிலம் குர்கான் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து கைது செய்து ஹரியானா அழைத்துச் சென்றனர். விசாரணையில் பண மோசடி மட்டுமின்றி இந்திய செல்போன் சிம் கார்டுகளை சீனாவைச் சேர்ந்த ஃபைசர் மோசடி கும்பலுக்கும் விற்றதும் தெரியவந்தது.