முசிறியில் பார் ஊழியரிடம் பணம் பறித்தவன் கைது

61பார்த்தது
முசிறியில் பார் ஊழியரிடம் பணம் பறித்தவன் கைது
முசிறி மேலவடுக்கபட்டியைச் சேர்ந்தவர் தனபால் இவர் முசிறியில் உள்ள அரசு மதுபான கடையில் உள்ள பாரில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பாரினை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தவரிடம் முசிறி செவந்தலிங்கபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் தகராறு செய்து கத்தியைக் காட்டி தனபால் வைத்திருந்த ரூபாய் 1500 பணத்தை பறித்துள்ளார். அப்போது தனபால் கூச்சலிட்டதில் பாரில் வேலை செய்யும் இருவர் ஹரிதாசை பிடித்து முசிறி போலீஸிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து தனபால் அளித்த புகாரின் பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தொடர்புடைய செய்தி