மணப்பாறை வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டேம் 4 ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் மாதேஷ் அவர்கள் தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர்.
அங்கே மணப்பாறை ஆண்டவர் கோவிலை சேர்ந்த பெருமாள் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நல்ல நேரம், குயில், விஷ்ணு, குமரன் ஆகிய லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததால் அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.