திருவரங்கத்தில் தனியார் நிறுவனத்தில் வயர் திருடியவன் கைது

65பார்த்தது
திருவரங்கத்தில் தனியார் நிறுவனத்தில் வயர் திருடியவன் கைது
திருவரங்கம் புலி மண்டபம் ரோடு ராயர் தோப்பு பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 16ஆம் தேதி ஒரு வாலிபர் உள்ளே புகுந்து அங்கிருந்த 5 அடி காப்பர் வயரை திருடி கொண்டு செல்ல முயன்றார். அப்போழுது அந்த கம்பெனியின் உரிமையாளர் ரமேஷ் பரத்ராஜ் என்பவர் பார்த்து உடனடியாக திருவரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் பெயர் மதன்குமார் (வயது 20) அம்மா மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி