தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ் இன்று
பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில், கோயில் மிராசு அர்ச்சகர் சுந்தர் பட்டர், கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் சென்னையில் அமைச்சர் ரமேஷை நேரில் சந்தித்து, கோயில் மரியாதை மற்றும் பிரசாதம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.