திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளில் சேந்தமாங்குடியைச் சேர்ந்த தேவஸ்ரீ அஜித்குமார் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு திருச்சி வடக்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்த சித்தூர் மணிவேல் இரண்டு கிராம் தங்க மோதிரம் வழங்கினார். இந்த நிகழ்வில் மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த், மருத்துவர்கள் ரமேஷ், மங்கள பிரியா, அஸ்வின் மற்றும் செவிலியர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.