முசிறி: வேன் மோதி பைக் ஓட்டுநர் பலி

55பார்த்தது
முசிறி: வேன் மோதி பைக் ஓட்டுநர் பலி
முசிறி அருகே எம். புதுப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் நேற்று (ஜூன் 4) முசிறி பழைய பேருந்து நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மகேந்திரா வேன் ஒன்று அவருடைய இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முசிறி காவல் நிலைய போலீசார் மகேந்திரா வேன் ஓட்டுனரான சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி