முசிறி சிவகாமி நகரில் வசிக்கும் பூபதி நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தபோது, இரவு திரும்பியதும் எட்டு பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. அதேபோல், அருகில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து ஆறு சவரன் தங்க நகைகள் திருடு போனதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில், முசிறி போலீசார் மர்மநபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.