திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய விமான சேவையை நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த சேவை திங்கட்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் செயல்படும். தினமும் மதியம் 3:05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.