துறையூர் சிஎஸ்ஐ பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம் திறப்பு

377பார்த்தது
துறையூர் சிஎஸ்ஐ பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம் திறப்பு
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சி. எஸ். ஐ. மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையல் அறைக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் எஸ். சாமுவேல் ராஜதுரை புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் மறை மாவட்டத்தலைவர் சகரியா கிருபாகரன் தலைமை தாங்கினார். குருத்துவ செயலாளர் ராஜா மான்சிங் முன்னிலை வகித்தார். பள்ளித் தாளாளர் இம்மானுவேல் வாழ்த்துரை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் ஏசுகுமார் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டனர்.