தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் முசிறியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. முசிறி போலீஸ் டி.எஸ்.பி (பொறுப்பு) விக்னேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்லதுரை முன்னிலையில், குஜராத் மாநில ஆயுதப்படை ஆய்வாளர் ரதோட் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் அச்சமின்றி வாக்களிக்கவும், ஜனநாயக கடமையை ஆற்றவும் அறிவுறுத்தினர்.