தொட்டியம் அருகே சாலையை சரி செய்யகோரி ஆர்ப்பாட்டம்

620பார்த்தது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் முதல் அரங்கூர் செல்லும் தார்சாலை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையைப் பயன்படுத்திச் செல்லும் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என ஏராளமானோர் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக சாலையைச் சரி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி