பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தி தெருநாய் மையத்தில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைக் கண்டித்து, தெரு நாய் வெல்பர் அசோசியேஷன் சார்பாக திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இச்சங்கத்தினர் தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கக் கூடாது என கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.