திருச்சி விமான நிலையம் வயர்லஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் இருதய பிரான்சிஸ், நேற்று கொட்டப்பட்டு அகதிகள் முகாம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென சாலையில் குறுக்கே வந்த மாடு காரணமாக தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.