திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

75பார்த்தது
திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது
திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50) இவர் கடந்த 2ஆம் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 28) என்கிற சரித்திர பதிவேடு ரவுடி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இது தொடர்பாக செல்வகுமார் பொன்மலை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ரமேஷை நேற்று 4ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you