துறையூர் அருகே பச்சபெருமாள்பட்டியில் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் ரஞ்சித்தை விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.