திருச்சியில் கொடிகட்டி பறக்கும் சந்து கடை வியாபாரம்

2பார்த்தது
திருச்சியில் கொடிகட்டி பறக்கும் சந்து கடை வியாபாரம்
திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மூன்று நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சந்துக்கடைகளில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு குவாட்டர் பாட்டில் மதுபானம் நூறு ரூபாய் வரை கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், வெளி மாநில மதுபானங்களும் சந்துக்கடைகளில் விற்பனையாகின்றன. இதை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி