ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. இந்த உற்சவம் 9 நாட்கள் நடைபெறும். முதல் நாள் மாலை, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வெள்ளி பல்லக்கில் உபயநாச்சியர்களுடன் புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபம் எதிரில் உள்ள நான்குகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளி, அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் ஊஞ்சலில் எழுந்தருளினார். தொடர்ந்து, நம்பெருமாளுக்கு மங்களாரத்தி காண்பிக்கப்பட்டு, உபயநாச்சியர்களுடன் ஊஞ்சலில் ஆடியபடி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.