திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பாக, இலங்கையில் நடைபெற்ற 12வது சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டிகளில் 65 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்துகொண்ட பிரஞ்சு மொழி ஆசிரியை கீதா ஸ்ரீ, 5000 மீட்டர் நடைப் போட்டி மற்றும் 3000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.