தொட்டியம்: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

549பார்த்தது
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஒன்று முதல் 18 வயதுடைய குழந்தைகளும், பள்ளி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். முகாமில் பார்வை திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு, செவித்திறன் குறைபாடு, உடல் இயக்க குறைபாடு, கண் பரிசோதனை, காது மூக்கு தொண்டை பரிசோதனை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மொத்தம் 120க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி