முசிறி அருகே கார் லாரி மோதி விபத்து 4பேர் பலியான சோகம்

0பார்த்தது
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவரது மனைவி கவிதா, மாமனார் முருகேசன், மைத்துனர் கார்த்திக் ஆகியோர் காரில் துறையூர் முசிறி சாலையில் உள்ள ஜம்புனாதபுரம் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பாலசுப்பிரமணியன் மற்றும் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கவிதா மற்றும் முருகேசன் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜம்புனாதபுரம் போலீசார் போக்குவரத்தைச் சீரமைத்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி