திருச்சி தில்லை நகரில் உள்ள அதிமுக மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில், 17வது வார்டு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சியைச் சேர்ந்த நிர்வாகி அ. ப. விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அதிமுகவில் இணைந்தனர். மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், புதிதாக இணைந்த அனைவருக்கும் அதிமுக கட்சி சால்வை அணிவித்து உறுப்பினர் படிவம் வழங்கி அவர்களைக் கட்சியில் இணைத்துக்கொண்டார்.