ஊட்டி கொடைக்கானல் போல் காட்சி அளித்த திருச்சி நகரம்

1பார்த்தது
திருச்சி நகரில் கடந்த சில தினங்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இன்று திருச்சி-மதுரை சாலையில் மணிகண்டம், நாகமங்கலம், துவரங்குறிச்சி பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். பனிமூட்டம் காரணமாக திருச்சி நகரம் ஊட்டி, கொடைக்கானல் போல் காட்சியளித்தது. அதிக குளிரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி