திருச்சி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 18ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் 324 தனியார் பள்ளிகளில் 2985 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் மே 22 முதல் சேர்க்கை பணிகள் தொடங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.