திருச்சி எடமலைப்பட்டி புதூர் கோரையாறு அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர் திட்டம் மூன்றின் கீழ் இரும்பு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு பதிக்க வைத்திருந்த 100 கிலோ எடையிலான இரும்பு குழாய்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி பணி ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக அதிகாரி இளங்கோவன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து கீழப்பஞ்சபூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வாசுதேவன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரும்பு குழாய்களை பறிமுதல் செய்தனர்.