திருச்சி நீதிமன்றம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதுபோல், தமிழகத்திலும் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.